iPhoneஐ முதலில் ஆன் செய்யும்போது தோன்றும் “Hello” திரை.

தொடங்குதல்

உங்கள் புதிய iPhoneஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு சில அடிப்படை அம்சங்களை அமைக்கவும்.

அடிப்படை விஷயங்களை அமைத்தல்

iPhone முகப்புத் திரை. செயலிகள் திரையின் அடிப்பகுதியில் ஒரே நிறத்தில் காட்டப்படும், வால்பேப்பர் புகைப்படத்தில் உள்ள வண்ணம் நிரப்பப்படும்.

தனித்துவமான அமைப்புகளைச் சேர்த்தல்

உங்கள் iPhone உங்கள் தனிப்பட்ட ஸ்டைலையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கும். பூட்டுத் திரையில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்களைக் காட்சிப்படுத்தலாம், முகப்புத் திரையில் விட்ஜெட்களைச் சேர்க்கலாம், வார்த்தையின் அளவையும் ரிங்டோன்களையும் சரிசெய்யலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

உங்கள் iPhoneஐ உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல்

கேமரா ஃபிரேமில் நான்கு நபர்களைக் காட்டும், புகைப்படப் பயன்முறையில் உள்ள கேமரா திரை.

உங்களின் சிறந்த தருணத்தைப் படமெடுத்தல்

நீங்கள் எங்கிருந்தாலும் தருணத்தைப் படமெடுக்க உங்கள் iPhoneஐப் பயன்படுத்தவும். உங்கள் iPhoneஇல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விரைவாக எடுப்பது மற்றும் மற்ற கேமரா அம்சங்களைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளவும்.

சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கவும்

FaceTime அழைப்பு.

தொடர்பில் இருத்தல்

iPhone உங்களுக்கு முக்கியமானவர்களைத் தொடர்புகொள்வதை எளிதாக்குகிறது. அவர்களை உங்கள் தொடர்புகளில் சேர்ப்பதால் தேவைப்படும் இடங்களில் எல்லாம் அவர்களின் தகவல்கள் உங்களிடம் இருக்கும். எனவே மெசேஜ்கள், ஃபோன் அழைப்புகள், FaceTime ஆகியவற்றின் மூலம் நீங்கள் தொடர்பில் இருக்கலாம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருத்தல்

அமைப்புகளில் உள்ள குடும்பப் பகிர்வு திரை. ஐந்து குடும்ப உறுப்பினர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களுக்குக் கீழே குடும்பச் சரிபார்ப்புப் பட்டியலும் அதற்குக் கீழே சந்தாக்கள் மற்றும் வாங்குதல் பகிர்வு விருப்பங்களும் உள்ளன.

குடும்பத்திலுள்ள அனைவரும்

தகுதிபெறும் செயலி வாங்குதல்கள், உங்கள் இருப்பிடம், உடல்நலத் தரவுகள் ஆகியவற்றைப் பகிர, நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தலாம். உங்கள் பாஸ்கோடை மறந்துவிட்டால் உங்கள் iPhoneக்கான அணுகலை மீண்டும் பெற உதவுவதற்கு, குடும்ப உறுப்பினரையோ நம்பகமான ஒருவரையோ தேர்வுசெய்யலாம்.

உங்கள் குடும்பத்தினருடன் அம்சங்களைப் பகிர்தல்

ஹோம் செயலியில் உள்ள “எனது வீடு” திரை.

தினசரிச் செயல்களை எளிதாக்குங்கள்

நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களுக்கு வழிகாட்டுவதற்கும், நீங்கள் வாங்கும் பொருட்களுக்குப் பணம் செலுத்துவதற்கும், முக்கியமான பணிகளை நினைவூட்டுவதற்கும், நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது முகப்புக் கதவைத் தானாகவே லாக் செய்வதற்குக் கூட உங்கள் iPhoneஇல் உள்ள செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளவும்.

உங்கள் அன்றாட நடைமுறைகளுக்கு iPhoneஐப் பயன்படுத்துதல்

100% சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் காட்டும் iPhone திரை.

நிபுணத்துவமிக்க உதவிக்குறிப்புகள்

உங்கள் iPhone மற்றும் அதிலுள்ள தகவல்களைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்க, Apple உதவி ஆலோசகர்களின் இந்த உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.

Apple உதவியில் இருந்து நிபுணர் ஆலோசனை

iPhone பயனர் வழிகாட்டியைப் பார்க்க, பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள “உள்ளடக்க அட்டவணை” என்பதை கிளிக் செய்து தேடல் புலத்தில் வார்த்தை அல்லது வாக்கியத்தை உள்ளிடவும்.

உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.